இன்று (11/04/2025) தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏரியூர் மற்றும் பிளியனூர் பகுதியில் இருந்து நான்கு புதிய பொறுப்பாளர்கள், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.கணேஷ் தலைமையில், தங்களை தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ்.பி. நாகராஜ், தருமபுரி மாவட்ட ஆலோசகர் நரசிம்மன், மற்றும் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும், சமூக நலனுக்காக தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்ட இவர்கள் அனைவருக்கும் தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள் மற்றும் சிறந்த முன்னேற்றம் வாழ்த்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக