தருமபுரி மாவட்டத்தில் நடமாடும் நியாயவிலைக்கடைகளில் குறைபாடுகள்: புகார் அளிக்க சிறப்பு எண் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

தருமபுரி மாவட்டத்தில் நடமாடும் நியாயவிலைக்கடைகளில் குறைபாடுகள்: புகார் அளிக்க சிறப்பு எண் அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 114 நடமாடும் (Mobile shop) பொது விநியோகத்திட்ட நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் தாமதம் அல்லது குறைபாடுகள் ஏற்படின், பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறைபாடுகள் அல்லது சேவையில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்த புகார்களை தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களை 9445000216 என்ற கைப்பேசி எண்ணிலும், தருமபுரி கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர் அவர்களை 7824833503 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad