தருமபுரி ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸில் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா குலுக்கல் - வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

தருமபுரி ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸில் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா குலுக்கல் - வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு.


தருமபுரி, ஏப்ரல் 1:

தருமபுரி நகரில் 1980ஆம் ஆண்டு நரேந்திரன் தலைமையில் துவங்கப்பட்ட ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ், தற்போது வெங்கடேஷ் நிர்வகிப்பில் துணிக்கடைகளில் ஒரு முன்னணி நிலையமாக திகழ்கிறது. தரமான பட்டு ரகங்களை குறைந்த விலையில் வழங்கி, தருமபுரியில் ஒரு மாபெரும் பட்டு புரட்சியை நிகழ்த்தி வருகிறது.


ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் மூலம் மாதம் 2000 கிலோ பட்டு நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு 1987ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்த பட்டு நூல் உற்பத்தி நிறுவனமாக கௌரவித்தது. காஞ்சிபுரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு பட்டு நூல் ஏற்றுமதி செய்து வருகிறது. தீபாவளி மற்றும் பொங்கல் விற்பனையில் வாடிக்கையாளர்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு) சிறப்பு குலுக்கல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசு:

  • 10 வாடிக்கையாளர்கள் - பங்காக் மற்றும் பட்டாயா போன்ற வெளிநாட்டு சுற்றுலா.

  • 10 வாடிக்கையாளர்கள் - இந்தியா சுற்றுலா.

  • 10 வாடிக்கையாளர்கள் - தமிழ்நாடு சுற்றுலா.

  • மொத்தம் 30 வாடிக்கையாளர்களை நிறுவனத்தின் சொந்த செலவில் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

குலுக்கல் விபரம்:

  • தேதி: ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு).

  • இடம்: ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ், தருமபுரி.

  • அனைத்து வாடிக்கையாளர்களும் குலுக்கலில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.


வெங்கடேஷ் அவர்கள் கூறியதாவது: "வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. வருங்காலத்திலும் தரமான பட்டு மற்றும் ரெடிமேட் துணிகளை குறைந்த விலையில் வழங்கி மகிழ்விக்க முனைப்புடன் செயல்படுகிறோம். எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வகையான ரெடிமேட் துணிகள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி!", என தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad