தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுக்குழு உறுப்பினர், சட்டமன்ற பொறுப்பாளர் குணா தலைமையில் நடந்தது.
சட்டமன்ற இணை பொறுப்பாளர்கள் சங்கீதா, கலைச்செல்வன், நகர தலைவர் கணேசன், நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் வீடு வீடாக சென்று பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி பேச வேண்டும் என்றும், தின்னைபிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம் செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் கணேசன், சிவநாதன், கருணாகரன், ஒன்றிய பொறுப்பாளர் கருணாகரன், முன்னாள் நகர தலைவர் வேலு மற்றும் நிர்வாகிகள் பசுபதி, முருகன், சரவணன், பெரியசாமி, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக