காவல் துறை தெரிவித்திருப்பதாவது, பாலக்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் மாநில மற்றும் ஊரக சாலைகளான கல்கூடப்பட்டி, செங்கோடப்பட்டி, வாழைத்தோட்டம், பி.செட்டிஅள்ளி, தீர்த்தாரஅள்ளி, அ.மல்லாபுரம் உள்ளிட்ட சந்திப்புகளில், அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் காரணமாக விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தற்காலிக தடுப்புகள் (barricades) அமைக்கப்பட்டுள்ளன. இவை மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் காவல் துறையால் அமுல்படுத்தப்பட்டவையாகும்.
23 ஏப்ரல் 2025 அன்று, பிற்பகல் 2 மணியளவில், கல்கூடப்பட்டி மேம்பாலம் அருகே மூன்று லாரிகள் ஒரே திசையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, கடைசி லாரியான காய்கறி பாரம் கொண்ட லாரி, வேகத்தையும் பாரத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் காயமடைந்துள்ளார். முன்னதாகச் சென்ற இரண்டு லாரிகள் தடுப்புகளை பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளன.
இந்த விபத்து குறித்து, காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பதிவு செய்தது தவறான தகவலாகும். இது வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறி, அவசரமாக பயணித்ததினால் ஏற்பட்டதென காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேற்படி விபத்து சம்பவம் குறித்த உண்மையான நிலை தொடர்பாக, மறுப்பு செய்தி சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுமென தர்மபுரி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக