சாமன்கொல்லையில் கஞ்சா விற்றவர் போலீசாரால் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

சாமன்கொல்லையில் கஞ்சா விற்றவர் போலீசாரால் கைது.


தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில், மகேந்திரமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சாமன்கொல்லை பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் பாலிதின் கவர் கையில் வைத்து சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுக் கொண்டிருந்தது போலீசாரின் கவனத்தை ஈர்த்தது. போலீசாரை கண்டதும் அவர் தப்பிச் செல்ல முயன்றார்.


உடனே அவ்வழியே ரோந்து சென்ற போலீசார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சாமன்கொல்லையைச் சேர்ந்த சின்னசாமி (வயது 50) என்பதும், கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரது கைப்பிடியில் இருந்த 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad