தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஏ.ஆர்.டி.எஸ் (ARDS) தொண்டு நிறுவனத்தில், வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பாலக்கோடு வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ARDS தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தின.
நிகழ்ச்சியில் ARDS இயக்குநர் ஆனந்தன் தலைமை வகித்தார். கிளை மேலாளர் சத்தியமூர்த்தி, தமிழ்நாடு கிராம வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன் மற்றும் சேவைகள், பிரதம மந்திரி இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
பின்பு, வழக்கறிஞர் முனுசாமி, பாலக்கோடு வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக, இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள், சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள், விபத்து தொடர்பான சட்ட விதிகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியை பாலசுப்ரமணி வரவேற்றார். இறுதியாக தமிழ்செல்வி நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மகளிர் அணியின் உறுப்பினர்களாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக