புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட சமூகநலத் துறையின் சார்பில் தருமபுரி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடர்பாக ஏப்ரல் மாத மாதாந்திர ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் திருமதி. சிந்தியா செல்வி, சமூக நல அலுவலர் திருமதி. பவித்ரா, முன்னோடி வங்கி மேலாளர் திரு. ராமஜெயம், மாவட்ட மின்னணு மேலாளர், EMIS ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்து கல்லூரி புதுமைப்பெண் திட்ட நோடல் அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், விரிவாக்க அலுவலர்கள், மாவட்ட மகளிர் அதிகாரம் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மார்ச் மாதத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 14,758 மாணவிகள் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 11,507 மாணவர்கள் நன்மை பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2024-2025 நிதியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.


மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருப்பதால், சிலருக்கு பணம் செல்லவில்லை. ஆதாருடன் வங்கி கணக்கை இணைத்து, தொடர்ந்தும் இத்திட்டத்தின் பயன்களை பெற மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாதந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000 பணம் சரியாக கிடைக்கப்படுகின்றதா என்பதைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள், அவசர நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad