தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி, ஏப்ரல் 23:

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் மற்றும் தமிழக அரசுப் பணியாளர் சங்கத்தின் இணைப்பில், இன்று தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் பெருந்திரளாகக் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வரவேற்புரை G.தனசேகரன் வழங்க, பாலகிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார். முன்னிலை உரைகளை S.சீனிவாசன், சபாபதி, R.சக்திவேல், காசி பரமசிவம், அன்பழகன், குணசேகரன், பச்சையப்பன், வேணுகோபால், கந்தசாமி உள்ளிட்டோர் வழங்கினர்.

கோரிக்கை விளக்க உரையில், தமிழ்நாடு சாலை பணியர் மாநிலத் தலைவர் பெரியசாமி பங்கேற்று, ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளை விளக்கினார்.


பிரதான கோரிக்கைகள்:

  • ஆதார் மற்றும் விரல் ரேகை சரிபார்ப்பு முறை 40% அளவில் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

  • நியாயவிலை கடை எடைத் தராசை (POS) ஆவ அலுவலக கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பிறகு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

  • பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும்.

  • உணவுப் பொருட்கள் சரியான எடை, தரம் மற்றும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.

  • ஊழியர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

  • IAS தலைமையில் ஊதியக் குழு அமைத்து, 9-வது மாநில ஊதிய மாற்றக் குழுவுடன் இணைக்க வேண்டும்.


மேலும், நீண்டநாள்களாக நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகள் குறித்தும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகள் காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad