பெரும்பாலான இடங்களில் சாலை மேற்பரப்பு முற்றிலும் சேதமடைந்து, இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வெளிச்ச வசதி குறைவாக இருப்பதால் விபத்துகளுக்கு வாய்ப்பு அதிகரித்து வருகிறது. பலர் சிறு சாய்ப்படுகாயங்களுடன் தப்பித்துக் கொண்டதற்கே துணிச்சலாகக் கூறப்படுகிறது.
சாலையின் அவல நிலையைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதுவரை பலமுறை நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் அளித்துள்ளதாவும், எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். சோமனஅள்ளி பகுதி மக்கள் கூறுகையில், “இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் தினசரி பயணம் செய்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் பாதுகாப்புடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சேதமடையும் நிலை ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரிக்கின்றன,” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இந்த சாலையின் பராமரிப்பை கையாள முடியாமல் கைவிட்டுவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது கோடை பருவத்தில் சாலை அமைப்பதற்கான உகந்த காலமாக இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக