ஆட்சித்தலைவர் தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களின் நலனுக்காக மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இரவு நேரங்களில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆட்சித்தலைவர் பேருந்துகள் வருகை, கால அட்டவணை, குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை போன்றவற்றையும் ஆய்வு செய்தார். குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகளின் செயல்பாடுகளைப் பரிசோதித்து, தொடர்ச்சியாக போதுமான குடிநீர் வசதி உறுதிப்படுத்த அறிவுறுத்தினார்.
பேருந்து நிலையம் மற்றும் நடைமேடைகளில் கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இடையூறாக இருப்பதை கண்டறிந்து, பொது இடங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டியதைக் குறிப்பிட்டார். கழிப்பிட வசதி மற்றும் அங்குள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், உணவு பாதுகாப்பு சான்றுகள், காலாவதியான பொருட்கள் விற்பனை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சித்தலைவர் எச்சரித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக