தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கும் நோக்கில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் மற்றும் திருப்பதி, மற்றும் பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை காவலர்கள் சிவப்பிரகாசம் மற்றும் மணியம்மை ஆகியோர், பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும் பேக்கரிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
இதன் போது, கோயிலூரான் கொட்டாய் பகுதியில் உள்ள மளிகை கடை, துரோபதி அம்மன் கோயில் அருகில் உள்ள பெட்டி கடை, மற்றும் கல்கூடபட்டியில் உள்ள மளிகை கடை ஆகிய 3 கடைகளில் சுமார் 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன. இதன் மூலம், மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு கடைகளுக்கு இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக