பென்னாகரம், ஏப்.24:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நல்லானூரில் அமைந்துள்ள மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கா. கோவிந்த் பங்கேற்று மாணவர்களுக்கு உளவியல் ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார். "தங்களுக்கே உரிய தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் திறமைதான் உங்களை உயர்த்தும். எனவே உங்கள் திறமையை செம்மையாக்கி, சமூகத்தில் சிறந்து விளங்குங்கள்," என்றார் அவர்.
பின்னர், அவர் மாணவர்களுக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்கி, இயற்கையை காப்பதற்கான விழிப்புணர்வையும், சமூக பொறுப்பையும் ஏற்படுத்தினார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் பரஞ்சோதி, பேராசிரியர்கள் மா.பாலாஜி, பா.பெருமாள், ரகுபதி, தாட்சாயணி, சத்தியப்ரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள், தங்களின் கல்விப் பயணத்திற்கான சிறந்த நிறைவாக இந்த நிகழ்வை நினைவில் வைத்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக