பாலக்கோடு அருகே சாலை பணி தாமதத்தால் மாணவர்கள் பொதுமக்கள் கடும் அவதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

பாலக்கோடு அருகே சாலை பணி தாமதத்தால் மாணவர்கள் பொதுமக்கள் கடும் அவதி.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை முதல் பொரத்தூர் வழியாக மாரண்டஹள்ளி செல்லும் சாலை சுமார் 3கிலோ மீட்டர் தூரத்திற்கு பழுதாதி குண்டும் குழியுமாக இருந்தது, இப்பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது, மேலும் பொரத்தூர், அத்தூரனஹள்ளி, பி.செட்டிஹள்ளி, நல்லாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருகின்றனர்.


இச்சாலை பழுதாகி குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்களின் புகாரை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தார் சாலையை சீரமைப்பதாக கூறி ஜேசிபி இயந்திரம் மூலம் தார் சாலை முழுமையாக தோண்டப்பட்டு ஜல்லிகற்கள் கொட்டப்பட்டது.


அதோடு சரி இதுவரை சாலையும் அமைக்க வில்லை ஜல்லி கற்கள் மீது மண்ணும் கொட்டப்படவில்லை, அவ்வழியாக செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் 2 சக்கர வாகனங்கள் கற்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.


மேலும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனங்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதுடன் விபத்துக்களும் ஏற்பட்டுவருகிறது. இச்சாலை சீரமைப்பது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தார் சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad