2004ஆம் ஆண்டு, வட்டகாணம்பட்டி முதல் நாராயாணன் கொட்டாய் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராம சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பொன்னப்பனிடம் சாலை அமைக்க சுமார் 50 சென்ட் பட்டா நிலம் வழங்குமாறு கோரினர். அதற்கு மாற்றாக அருகே உள்ள 25 சென்ட் புறம்போக்கு நிலத்தை தருவதாக உறுதியளித்தனர்.
அதனை ஏற்று, விவசாயி பொன்னப்பன் 50 சென்ட் விவசாய நிலத்தை சாலை அமைப்பதற்காக வழங்கினார். அதன்பின், புறம்போக்கு நிலத்தை சீரமைத்து விவசாயம் செய்து வந்தார். பின்னர், அந்த நிலத்திற்கு பட்டா கோரி பொன்னப்பன் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார்.
அதிகாரிகள் அளவீடு செய்வதற்காக விவசாய பயிர்களை மிதித்து நாசமாக்கியதாகவும், விவசாயியின் நிலம் மீட்கப்பட்டதாகவும் விவசாயி பொன்னப்பன் வேதனையுடன் கூறுகிறார். விவசாய நிலம் அளித்த விலை விவசாயிக்கு கண்ணீரானது. "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நிலத்தை மீட்க முயல்வது முறைகேடு. நான் எந்தவித சட்ட ரீதியிலான தவறும் செய்யவில்லை. தமிழக முதல்வர் உரிய நியாயத்தை வழங்க வேண்டும்" என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார் விவசாயி பொன்னப்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக