அதன்படி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டிப் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி மற்றும் பழங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் நகர செயலாளர் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில், புலிகரை செந்தில், கணபதி, ரவிச்சந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சாம்ராஜ், பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ராஜா, டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் விமலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ராஜா, அசோக், கிளை செயலாளர் மாதப்பன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமாக கலந்துகொண்டு பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக