நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், வக்கில் எம்.வீ.டி.கோபால், ஒன்றிய துணை செயலாளர் பி.எல்.ஆர்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலையை விட அதிகமாக காணப்படுகிறது. இதனை எதிர்கொண்டு பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதற்கமைய, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி மற்றும் பழங்களை வழங்கி தாகத்தை தீர்த்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகர அவை தலைவர் அமானுல்லா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், விவசாயி அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.வி.குமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சந்துரு, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அழகுசிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், ஜெயந்திமோகன், ரூஹித், ஒன்றிய துணை செயலாளர் மாதேஷ், ஒன்றிய பொருளாளர் துரை, முன்னாள் அவை தலைவர் ராஜீ, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, வார்டு செயலாளர்கள் கணேசன், வடிவேல், சரவணன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் மன்சூர், தகவல் தொழில்நுட்ப தொகுதி பொறுப்பாளர் லோகேஸ்வரி மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக