தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தருமபுரி கிழக்கு மாவட்டம், தருமபுரி மேற்கு ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாம், தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார் அவர்களின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் B.குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில அவைத் தலைவர் டாக்டர் V.இளங்கோவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் PK.குமார், மாவட்ட பொருளாளர் Dr. P.ராமச்சந்திரன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் S.பிரகாஷ், ITWING செயலாளர் சேது, மாவட்ட ITWING துணை செயலாளர் யோகன்னசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேஸ்வரி சிவகுமார், மாவட்ட பொறியாளர் அணி துணை செயலாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக