தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை துணை மின் நிலையத்தில் வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சார குறைகளை தீர்க்கும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் விவசாயிகள், மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களுடைய மின்சார குறைகளை அளித்து உடனடியாக தீர்வு பெறலாம். பாலக்கோடு கோட்டத்திற்குட்பட்ட அனைத்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக