பென்னாகரம், ஏப்.22:-
இன்று, புவி தினம் முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நீதிமன்றம் அருகில் 100 மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா இயற்கையைக் காப்போம் தலைமையகம் சார்பில் நடைபெற்றது. இதில் பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி தலைமை தாங்கினார். காரிமங்கலம் தனி வட்டாட்சியர் சுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுவதை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வை இயற்கையைக் காப்போம் தலைமையகம் நிறுவனர் கோ.தாமோதரன் ஒருங்கிணைத்தார். விழாவில், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன் மற்றும் எம்.ஷகிலா, பருவதனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற உதவியாளர் முருகன், மற்றும் தேவி மஹா டிரஸ்ட் தேவகி உள்ளிட்ட முக்கியப் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இயற்கையைக் காப்போம் தலைமையக நிர்வாகிகள் குமரவேல், தலைமை ஆசிரியர் துரை.முருகவேல், அருள், ஆறுமுகம், தாமோதிரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு புவி தினம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். இந்த விழா, மண் மற்றும் சூழலியல் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் சிறப்பாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக