தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கேத்தன அள்ளி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற பசுவேஸ்வரர் கோயில் தற்போது முக்கிய விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான வழிபாட்டு தலத்தின் ஒரு பகுதி, சில தனிநபர்களால் ஆக்கிமிப்பு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் செய்யப்பட முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் ஆதரவுடன், கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி அந்த இடத்தில் வழிபாடு மேற்கொண்டனர். அதன்பிறகு, ஊர் பொதுமக்களுடன் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை செயலாளர் ராஜா தலைமையில், ஸ்ரீ பசுவேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சட்டபூர்வமாக மீட்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் நோக்கில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் பிரபு, பூசாரிகள் சங்க மாவட்ட தலைவர் சுந்தரம், மாத்ரு சக்தி மாவட்ட தலைவர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய செயற்பாளர்கள் கலந்து கொண்டனர். இச்சம்பவம் இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகலாம் என கருதி, 10க்கும் மேற்பட்ட காரிமங்கலம் போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக