தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஈச்சம்பள்ளம் காப்புக் காடு பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யாணைகள், கடந்த சில நாட்களாக ஈச்சம்பள்ளம், சந்திராபுரம், பாறைகொட்டாய், காளிகவுண்டன் கொட்டாய், தொட்டபாவளி, தாசன் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைந்து, விவசாய நிலங்களில் நெல், கரும்பு, தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த யாணைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, காப்புக் காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், விரட்டப்பட்ட யாணைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறியதால், மீண்டும் சந்திராபுரம், பாறைகொட்டாய், காளிகவுண்டன் கொட்டாய், பெலமாரனஅள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள ஊருக்குள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதனை முன்னிட்டு, இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. யாணைகள் நடமாட்டம் தொடர்பாக தகவல் தெரிந்தவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் வனசரக அலுவலர் நடராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக