பாலக்கோடு, ஏப்.24:
2018ஆம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த எரிவாயு தகன மேடை, கடந்த ஓராண்டாக தொழில்நுட்ப பழுதால் செயலற்ற நிலையில் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை முன்னிட்டு, பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி இன்று பூஜை செய்து முறையாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் பி.எல்.ஆர்.ரவி, வகாப்ஜான், சரவணன், மோகன், ஜெயந்திமோகன், திமுக ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, திமுக நிர்வாகிகள் கணேசன், பச்சியப்பன், கிளை செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீரமைக்கப்படும் எரிவாயு தகன மேடை முறையான தூய்மையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில் பலருக்கும் பயன்படவுள்ளது என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக