பென்னாகரம் அடுத்த செங்கனூர் அரசு பள்ளியில் உலக புத்தக தினம் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

பென்னாகரம் அடுத்த செங்கனூர் அரசு பள்ளியில் உலக புத்தக தினம் அனுசரிப்பு.


தர்மபுரி, ஏப்ரல் 23:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு, மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி பேசும்போது, "பாட புத்தகங்களை தாண்டி, ஒவ்வொரு நாளும் மாணவர்கள் நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பெற்றால், நமது தேவையற்ற தீய பழக்கங்களை மறக்க முடியும்" என்றார். அவர் மேலும், "பள்ளி பருவத்தில் சிறார் கதைகள் மற்றும் படக்கதைகளை விரும்பி படிக்க வேண்டும். வாசிப்பின் மீது நாட்டம் ஏற்படுத்த, எளிமையான புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை வாசித்து பழகியாலேயே வாசிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும்" என்றார்.


இதன் மூலம், மாணவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து சிறந்த கதைகளை இயல்பாகவும் அற்புதமாகவும் விவரித்து கூறினார்கள், இது பாராட்டுக்குரியது. சிறப்பாக கதைகள் சொன்ன மாணவர்களுக்கு தேசத் தலைவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் குறித்த புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி மற்றும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad