தனியார் பால் நிறுவனத்தில் திருட முயன்ற வாலிபர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

தனியார் பால் நிறுவனத்தில் திருட முயன்ற வாலிபர் கைது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த செங்கன் பசுவந்தலாவ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனத்தில், கடந்த பிப்ரவரி 26ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் பின்பக்க காம்பவுண்ட் சுவரை ஏறி குடோனில் இருந்த காப்பர் கம்பிகளை திருட முயன்றார்.


இந்த அத்துமீறலைக் கவனித்த பாதுகாவலரும் மேற்பார்வையாளரும் சத்தம் போடவே, குற்றவாளி காப்பர் கம்பிகளை அங்கேயே விட்டு விட்டுவிட்டு தப்பியோடினார். இது தொடர்பாக நிறுவனம் சார்பில் அதிகாரி கந்தரராஜீ மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்ததில், குற்றத்தில் ஈடுபட்டவர் கொலசனஅள்ளியை சேர்ந்த யோகேஷ்வரன் (வயது 20) என்பது தெரியவந்தது.


தலைமறைவாக இருந்த யோகேஷ்வரனை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை தர்மபுரி சிறையில் அடைத்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad