ஆன்லைன் முதலீட்டு மோசடி: "AM TECH WORLD" நிறுவனம் மீது ரூ.12 கோடி மோசடி வழக்கு – 115 பேர் பாதிப்பு!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

ஆன்லைன் முதலீட்டு மோசடி: "AM TECH WORLD" நிறுவனம் மீது ரூ.12 கோடி மோசடி வழக்கு – 115 பேர் பாதிப்பு!.


தருமபுரி, ஏப் 23:-

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள ஜாலிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி (அ) ஆன்டனி மற்றும் அவரது மனைவி மேரி மார்கிரேட் ஆகியோர் "AM TECH WORLD" என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனம் நடத்தி வந்தனர்.

இவர்கள் வாட்ஸ்அப்பில் Daily Scheme, Weekly Scheme, Ohgod Scheme போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி, குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக திருப்பி தருவதாகவும், Car, Gold Coin, iPhone, Gas Stove, TV, AC போன்ற பரிசுகள் தருவதாகவும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்றனர். முதலில் முதலீடு செய்த சிலருக்கு பரிசுகள் வழங்கி நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர், தொடர்ந்து பலரை தங்களின் திட்டங்களில் ஈடுபடுத்தி பெரிய அளவில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.


இதுவரை 115 பேர் புகார் அளித்துள்ளனர். இழப்பீடு தொகை மட்டும் ரூ.12 கோடி 29 லட்சத்து 82 ஆயிரத்து 33 ரூபாய் ஆகும் என்பது போலீசார் தெரிவிப்பு. இந்த வழக்கு தொடர்பாக தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பின்பு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். அந்தோணி 01.02.2025 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


குற்றப்பிரிவு காவல்துறையினர் தற்போது:

  • அவர்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கண்காணித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் உள்ளனர்.

  • அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

  • உறவினர்கள் மற்றும் பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்களையும் விசாரித்து வருகின்றனர்.


பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

"AM TECH WORLD" நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பணம் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவர்கள், தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன் உடனடியாக தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.

📍 அலுவலக முகவரி:
காவல் ஆய்வாளர்,
பொருளாதார குற்றப்பிரிவு,
வள்ளுவர் நகர், ஒட்டப்பட்டி, தருமபுரி.

கருத்துகள் இல்லை:

Post Top Ad