கையெழுத்து பிரதி நூல்கள் வெளியீட்ட மாணவியர்களுக்கு ஆட்சித்தலைவர் பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

கையெழுத்து பிரதி நூல்கள் வெளியீட்ட மாணவியர்களுக்கு ஆட்சித்தலைவர் பாராட்டு.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கையெழுத்து பிரதி நூல்கள் எழுதி வெளியிட்ட பென்னாகரம் ஒன்றியம், குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவியர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் அண்மையில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவியர்களான செல்வி. ஸ்ருத்திகா, செல்வி. பவுனம்மாள், செல்வி. மகாலட்சுமி ஆகியோர் எழுதிய கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.


மாணவ, மாணவியர் சிறு வயதில் படைப்பாற்றலுடன் வளர்வது வரவேற்கத்தக்கது என விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டினார்கள். இந்த விழாவை தொடர்ந்து, கையெழுத்து பிரதி நூல்களை வெளியிட்ட மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி, மாணவியர்களின் படைப்பாற்றலை பாராட்டினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. ஜோதி சந்திரா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி. தென்றல், பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் திரு. துளசிராமன், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் திரு. முனுசாமி, குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கோவிந்தசாமி உள்ளிட்ட கல்வித்துறையினர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad