கோடை வெயில் தணிக்க இலவச மோர் வழங்கும் சேவை - ஜேசிஐ தருமபுரி பில்லர்ஸ் முன்னெடுப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

கோடை வெயில் தணிக்க இலவச மோர் வழங்கும் சேவை - ஜேசிஐ தருமபுரி பில்லர்ஸ் முன்னெடுப்பு.


 தருமபுரி, ஏப்ரல் 1:

ஜேசிஐ தருமபுரி பில்லர்ஸ் சார்பாக கோடை வெயிலை தணிக்கும் முயற்சியாக, இன்று (01.04.2025) முதல் கோடை காலம் முடியும் வரை (100 நாட்களுக்கு) தருமபுரி நகரில் தினமும் இலவசமாக மோர் வழங்கப்படும் என அமைப்பின் தலைவர் வினோத் தெரிவித்தார்.


முதற்கட்டமாக, இன்று (01.04.2025) சாலையோர பணியாளர்கள், முதியோர்கள், துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்து காவலர்கள் என 150 நபர்களுக்கு 300 மில்லி பாட்டிலில் மோர் வழங்கப்பட்டது. தேவை அதிகரித்தால் மேலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜேசிஐ தருமபுரி பில்லர்ஸ் தலைவர் வினோத், செயலாளர் ராம்குமார், உறுப்பினர்கள் சுவாமிநாதன், ராஜேந்திரன், முருகேசன், பால் சகாயராஜ், ஸ்டெபி ஷீலா, முருகன் மற்றும் ஜேசிஐ தருமபுரி தலைவர் பாபு, செயலாளர் கணேசன், முன்னாள் தலைவர் விஜயகுமார், துவக்க தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு செயல்திட்டத்தை முன்னெடுத்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad