தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் ஆய்வு.


தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.04.2025) ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவியர்களின் கற்றல் மற்றும் வாசித்தல் திறனை ஆய்வு செய்து, பாடங்கள் தொடர்பாக மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பினார்.


மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறனை அறிய, பாடங்கள் குறித்து விளக்கங்கள் கேட்ட போது, உரிய பதில்களை அளித்த மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கினார். அதனை தொடர்ந்து, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.


பொதுமக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதம் இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கோரிக்கைகள் நிறைவேற்றவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி. தனலட்சுமி, திருமதி. சத்யா, உதவி பொறியாளர் திரு. சீனிவாசன் மற்றும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad