நாகாவதி அணையினை மீன்பாசிக் குத்தகை - விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

நாகாவதி அணையினை மீன்பாசிக் குத்தகை - விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி மாவட்டத்தில் நாகாவதி அணையினை மீன்பாசிக் குத்தகைக்கு பெற விருப்பமுள்ளவர்கள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி படிவத்தினை பதிவிறக்கம் செய்து, சமர்பிக்கலாம். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாகாவதி நீர்த்தேக்கத்தினை 5 ஆண்டுகளுக்கு மீன்பாசிக் குத்தகைக்கு விடும் பொருட்டு இணையவழி ஏல அறிவிப்பானது (e-Tender) சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அவர்களால் கடந்த 07.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


மேற்படி நாகாவதி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி ஏலம் தொடர்பான ஏல அறிவிப்பு, ஏல நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை www.tntenders.gov.in என்ற பார்வையிடலாம். மேலும் இந்த இணையவழி ஏலத்தில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் உள்ளிட்ட இதர படிவங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் 19094/F5/2020 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேற்படி இணையவழி ஏலத்தில் (e-Tender) ஒப்பந்தப் புள்ளியானது 07.04.2025 மாலை 05.00 மணி முதல் 21.04.2025 பிற்பகல் 02.00 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் அல்லது ஒட்டப்பட்டியில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.


எனவே, தருமபுரி மாவட்டத்தில் நாகாவதி அணையினை மீன்பாசிக் குத்தகைக்கு பெற விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad