பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக வாட்ஸ் ஆப் குழு தொடக்கம் - தருமபுரி ரயில்வே நிலையத்தில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக வாட்ஸ் ஆப் குழு தொடக்கம் - தருமபுரி ரயில்வே நிலையத்தில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி.

தருமபுரி, ஏப்ரல் 1:

தருமபுரி ரயில்வே நிலையத்தில், பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் வட்ட ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தருமபுரி பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்தோஷ கவுக்கர் முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்வில், ரயில் பயணத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. பெண்கள் சமூக விரோதிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் மற்றும் விலை உயர்ந்த உடைமைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.


பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளில் உதவுவதற்காக, கட்டணமில்லா உதவி எண்கள் 1512, 139, 1091, 1098 ஆகியவை மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மேலும், குறைந்த நேரத்தில் உதவியளிக்க, பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக புதிய வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது. இதில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9498101964.


இந்த வாட்ஸ் ஆப் குழுவின் மூலம், பெண்கள் தங்களின் பிரச்சனைகளை உடனடியாக தெரிவித்தால், அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வசதியை பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் தங்கராஜ், ரமேஷ், பெண் பயணிகள், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad