தருமபுரி மாவட்டத்தில் TATA ELECTRONICS நிறுவனத்தின் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

தருமபுரி மாவட்டத்தில் TATA ELECTRONICS நிறுவனத்தின் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.


தருமபுரி, ஏப்ரல் 23:

தருமபுரி மாவட்டத்தில் TATA ELECTRONICS நிறுவனத்தின் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், ஐ.ஏ.பி., அவர்கள் இந்த விவரத்தை வெளியிட்டார். இம்முகாமில், TATA ELECTRONICS, HOSUR நிறுவனத்துடன் இணைந்து, பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.


இந்த முகாம் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 25.04.2025 அன்று காலை 09:00 மணிக்கு நடைபெறும். இம்முகாமில், 12-ஆம் வகுப்பு, ITI, Diploma, மற்றும் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள் (2023, 2024, 2025 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்) ஆகிய கல்வித்தகுதியுடன், 18 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண் வேலைநாடுநர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.


சம்பளம்: ரூ.13,500/- முதல் 16,000/- வரை

சலுகைகள்: உணவு, தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து வசதி இலவசமாக வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

  • அசல் மற்றும் நகல் கல்விச்சான்றிதழ்கள்

  • ஆதார் கார்டு

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


மேற்கூறிய தகுதிகளுடன் பெண் வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, வேலை வாய்ப்புகளைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், ஐ.ஏ.பி., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad